Anniversary

தோப்பகம் தொண்டர் சபையின் 41 ஆவது ஆண்டு விழாவும் கல்விச்சேவை நிலைய பரிசளிப்பு விழாவும் | 15-Jan-2026

தோப்பகம் தொண்டர் சபையின் 41 ஆவது ஆண்டு விழாவும் கல்விச்சேவை நிலைய பரிசளிப்பு விழாவும் 2026

🌼 தோப்பகம் தொண்டர் சபை – 41வது ஆண்டுவிழா & கல்விச்சேவை நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 🌼 தோப்பகம் தொண்டர் சபையின் 41வது ஆண்டுவிழாவும், கல்விச்சேவை நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்
இன்று மாலை வீரகத்திவைத்திலிங்கம் மண்டபத்தில், மங்கள விளக்கேற்றலுடன், தலைவர் திரு. க. அன்பழகன் அவர்களின் தலைமையில் இனிதே ஆரம்பமானது.

இவ்விழாவில் காரை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு. கி. கோவிந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும், பிரதேச சபை அங்கத்தவர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், கல்விச்சேவை நிலைய ஆசிரியர்கள், கிராமத்தின் மீது அக்கறையும் பற்றும் கொண்ட பெரியவர்கள்,
பெற்றோர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் தோப்பகம் தொண்டர் சபை அங்கத்தவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக அலங்கரித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி தொடர்ந்து, தோப்பகம் தொண்டர் சபையின் கல்விச்சேவை நிலைய மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மற்றும் விருந்தினர்களின் உரைகள்
நடைபெற்று, விழா இனிதே நிறைவுற்றது. இந்த அருமையான நிகழ்வினை
சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கும், பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும், ஆசிரியர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள், மாணவர்கள்
என அனைவருக்கும் தோப்பகம் தொண்டர் சபையினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர் 🙏

📚 கல்வி வளரட்டும் | சேவை தொடரட்டும் | தோப்பகம் உயரட்டும் 🌸

காலம் : 15- 01-2026
நேரம்: பிற்பகல் 02: 30 மணி
இடம் : சுப்பிரமணிய சுவாமி கோவில் வீரகத்தி வைத்திலிங்கம் மண்டபம்

தகவல் : குலதீபன் துரை

Leave a Reply

More News & Related Stories

Thoppagam Volunteers Society

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகல சிறுவர் தின விழா 2026!

நாளை உலகை ஆளப்போகும் குட்டித் தேவதைகளின் கொண்டாட்டத் திருவிழா! தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில்...
News

ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! | தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம்

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! “எழுத்தறிவித்தவன்...

Featured Image Gallery