History

தோப்புக்காடு – வாலை சரஸ்வதி கோயில் – சாமியப்பா

இலங்கைத் திருநாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள காரைநகர் என்ற அழகான தீவிலுள்ள, தோப்புக்காடு எனும் கிராமத்தை தனது தவ வாழ்க்கைகுரிய வாழ்விடமாக தெரிவு செய்து வாழ்ந்தவர். செல்லையா கந்தசாமி (துரைஐயா) என்னும் இயற்பெயருடைய அவர் ஊர் மக்களால் சாமியப்பா என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.

வாலை சரஸ்வதி கோயில் அனுக்கிரகத்தோடு, அம்பாளிற்கு கோவில் கட்டி, தினமும் தமிழில் பூசை வழிபாட்டுடன், தியானம், நெறி தவறாத வாழ்க்கையை இயல்பாகக் கொண்டவர். 

நவராத்திரி காலங்களில் வாலை சரஸ்வதி கோவில் திருவிழாக் கோலம் கொள்ளும். ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான படையலுடன் பூசை நடைபெறும். ஊர் மக்கள் ஒன்றுகூடி, ஒரு நாளைக்கு ஒருவராக பிரித்து, இப்பூசையினை நடத்துவார்கள். ஒன்பதாம் நாள் சாமி வெளிவீதி உலாவுடன் , பாயாசம் வழங்கி , நவராத்திரி நிறைவுக்கு வரும் .

வெள்ளிக்கிழமை தோறும் மௌன விரதம் இருந்து, இரவு நேர பூசை வழிபாட்டின் பின்பு , மக்களோடு கதைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்தவர். சித்தர் வழிபாட்டின் உந்துதலினால், உச்சநிலை தொட்டு பித்து நிலை தெளிந்தவர். சித்தர் இயல்பினால் பல கலைகளில் கைதேர்ந்தவர். 

சித்தவைத்திய (ஏட்டு வைத்திய) பரம்பரையில் வந்தவர். சரஸ்மணி வைத்திய சாலையினை தனது ஊரிலும், ஊர்காவற்றுறையிலும் நடாத்தி சிறு கட்டணத்துடன் சித்தவைத்தியம் செய்தவர்.

சரஸ்மணி சித்த வைத்திய சாலை

கட்டணம் முழுவதையும் இறைபணிக்காக செலவு செய்வார். சில சமயங்களில் தானே சிலைகளை செய்வார், கட்டடத்தையும் கட்டுவார்.


நல் மாந்திரீகம் மட்டும் செய்வது என்று திடம் கொண்டு வீட்டுக்காவல், மந்திரித்தல், தாயத்து கட்டுதல், நூல்கட்டுதல், காவல் மந்திரம், மந்திர தகடு எழுதுதல் போன்றவற்றுடன் மனநல சிகிச்சையாக பேய் ஓட்டுதலையும் செய்தவர்.

இயற்கவியாகிய இவர் கோவில்களுக்காக எழுந்தருளிப் பாடல்களையும், விடுதூது மற்றும் இறந்தவர்களுக்காக கல்வெட்டு போன்றவற்றை இயற்றியவர். 


குறிப்பு எழுதுதல், சோதிடம் பார்த்தல் போன்றவற்றில் பிரபலமானவர். 


இயல்பான கலையார்வத்தினால் கதாப்பிரசங்கம், வாய்ப்பாட்டு, வயலீன் போன்றவற்றை வாலை சரஸ்வதி கோயில் உற்சவ காலங்களில் மேடையேற்றியவர். கலைவளர் கழகம் என்னும் அமைப்பினை உருவாக்கி, சிறுவர்களுக்காக கட்டணமில்லாத மிருதங்க பயிற்சிகளை ஆசிரியர் மூலம் பயிற்றுவித்தவர். உற்சவ காலங்களில் அந்தச்சிறார்களை மேடையேற்றியவர்.


கோயிலிற்கான பூந்தோட்டம் மரக்கறித்தோட்டம் வளர்த்து வந்தவர்.
போரின் சீற்றத்தின் பின்னரான கோவில் படங்கள்


வாலை சரஸ்வதி கோயில் தற்போதய நிலை

One response to “தோப்புக்காடு – வாலை சரஸ்வதி கோயில் – சாமியப்பா”

Leave a Reply

More News & Related Stories

Thoppagam Volunteers Society

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகல சிறுவர் தின விழா 2026!

நாளை உலகை ஆளப்போகும் குட்டித் தேவதைகளின் கொண்டாட்டத் திருவிழா! தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில்...
News

ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! | தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம்

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! “எழுத்தறிவித்தவன்...

Featured Image Gallery