ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! | தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம்
தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் ![]()
![]()
ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! ![]()
![]()
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”
எமது தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்து, சமூகத்தில் அவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்கும் எமது அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களைக் கௌரவிக்கும் ஆசிரியர் தின விழா இன்று மிகச் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது! ![]()
![]()
நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்கள்:
மங்கல விளக்கேற்றல் & தீபமேந்தி கௌரவித்தல்: ஆசிரியர்கள் அனைவரும தீபமேந்தி, மாணவர்களின் நல்வாழ்த்துகளோடு விழாவினைத் தொடக்கி வைத்தனர்.
ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மதிப்பளிப்பு: எமது கல்விச் சேவை நிலையத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு மாலைகள், பொன்னாடைகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்: எமது மாணவச் செல்வங்களின் அழகிய பரதநாட்டியம் மற்றும் பாட்டுப் போட்டிகள் மேடையைச் சிறப்பித்தன.
வழிகாட்டல் உரை: ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் விழா இனிதே நிறைவுற்றது.
மாணவர்களின் அறிவொளியாகத் திகழும் எமது ஆசிரியப் பெருமக்களுக்கு எமது தோப்பகம் தொண்டர் சபையின் சார்பில் மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! ![]()
![]()
“கல்வியே மேன்மை | ஒற்றுமையே பலம்” ![]()
![]()





Leave a Reply
You must be logged in to post a comment.