History

இசைமணி – பொ. கந்தசாமிபிள்ளை

இசைமணி – பொ. கந்தசாமிபிள்ளை

ஆக்கம் : வெண்ணிலாதேவி ஈஸ்வர் – Boston, USA – முன்னாள் உதவி விரிவுரையாளர் (Ramanathan Academy of Fine Arts, University of Jaffna.)

காரைநகர்,தோப்பூர் கிராமத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அக்கிராமத்தில் இசை கற்க வசதி இல்லாது இருந்தது. அக்கால கட்டத்தில் இந்தியாவிற்கும் அவர் வசித்த கிராமத்திற்கும் இடையிலே பண்டமாற்று கப்பல்கள் போக்குவரத்து இருந்தது.

அவரது தீவிரமான இசையார்வத்தின் விளைவாக, கப்பல் பயணத்தின் மூலம் இந்தியா வந்து சேர்ந்தார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றார்.பின்னர், அவர் ‘இசைமணி’ பட்டத்தைப் பெற்றார்.

அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசையைக் கற்றுக்கொள்ளும் கால கட்டத்தில் இசைப் பேரரசு தண்டபாணி தேசிகரிடம் இசையை கற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தனது ஆசானான தண்டபாணி தேசிகர் இயற்றிய தமிழ் இசைப்பாடல்களை தனது மாணவர்களுக்கும் கற்பித்தது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவர் இசை கற்கும் காலப் பகுதியில் சீர்காழி கோவிந்தராஜன் சக மாணவனாக இருந்தபடியால் அவரின் நட்பும் இவருக்கு கிடைத்தது.

பொ. கந்தசாமிப்பிள்ளை இசையில் மட்டும் அல்லாது ஒரு சிறந்த நாடக நடிகனுமாவார். இவர் பல நாடக மேடைகளில் நாடகங்களையும் நடித்தார். கண்ணப்ப நாயனார், அரிச்சந்திரன், பக்த நந்தனார், ஸ்ரீவள்ளி உள்ளிட்ட இசை நாடகங்களில் இவர் பிரதான பாத்திரங்களில் நடித்தது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இலங்கையின் வானொலி நிகழ்ச்சிகளில் இவர் பல தடவைகள் இசைக்கச்சேரி செய்திருக்கிறார்.

இவர் இந்தியாவில் தனது பட்டப்படிப்பை முடித்து தனது ஊருக்குத் திரும்பியபின் இசையை வளர்க்கும் நோக்கோடு தனது ஊரிலும் பக்கத்து ஊர்களான களபூமி, ஊர்காவற்றுறை, வலந்தலை, போன்ற ஊர்களுக்கும் சென்று மாணவர்களுக்கு இசையை கற்பித்தார். அதேவேளை காரைநகர் இந்து கல்லூரி, ஊர்காவற்றுறை, அனலை தீவு, வேலனை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இசை ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

அத்தோடு மட்டுமல்லாமல் தனது சந்ததி மூலம் இசை நிலைத்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது மகளின் நான்கு பெண் பிள்ளைகளுக்கும் இசையை கற்பித்தார் , அவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவூரின் கோவில்களில் சிறப்பு விழாக்களில் பாடவும் வைத்தார். வட இலங்கை சங்கீதசபை நடத்திய இசை தேர்வுகளுக்கேற்ப இசையை கற்பித்தார். வாரிவளவு நல்லியக்கச்சபை வருடா வருடம் நடத்திய இசைப் போட்டிகளில் வெற்றி பெறும் அளவிற்கு அவர் அவர்களை ஊக்குவித்து இசையை கற்பித்தார்.

இவர் தான் ஓய்வுபெற்ற ஆசிரியரானபின்னும் ஓய்வு இல்லாது தனது இறுதி காலம்வரை மாணவர்களுக்கு இசையை கற்பித்து தோப்பூர் கிராமத்தில் இறைபதம் அடைந்தார்.

Leave a Reply

More News & Related Stories

Thoppagam Volunteers Society

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில் கோலாகல சிறுவர் தின விழா 2026!

நாளை உலகை ஆளப்போகும் குட்டித் தேவதைகளின் கொண்டாட்டத் திருவிழா! தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையத்தில்...
News

ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! | தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம்

தோப்பகம் தொண்டர் சபை – கல்விச் சேவை நிலையம் ஆசிரியர் தின விழா 2026 கோலாகலக் கொண்டாட்டம்! “எழுத்தறிவித்தவன்...

Featured Image Gallery