தொகுப்பு : குலதீபன் துரை
காரைநகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற புகையிரநிலைய அதிபர் திரு. வேலுப்பிள்ளை ஐயா அவர்கள் தான் இவர். நான் பிறந்த வருடத்தில் இப்பெரியவர் “பென்ஷன்” ஆகியிருக்கிறார்.
1941ம் ஆண்டில் பிறந்த இவர், தனது 22வயதில் (1963) புகையிரத நிலைய அதிபர் சேவையில் இணைந்துள்ளார். பின்னர் 1985ம் ஆண்டில், சகல அரச அலுவலர்களும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருத்தலை அவசியமாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, இவரும் தனது அரச தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
முன்னைய நாட்களில் எம்மவர்கள், இலங்கை புகையிரத திணைக்களத்தின் அதிமுக்கிய பதவிகளை வகித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தனது பயணத்தின் நிமித்தம், அனுராதபுரம் நிலையத்துக்கு வந்திருந்தபோது அவரை சந்திக்கும் தருணம் கிடைத்தது.
