தோப்புக்காடு காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வரதராசா யுவாஸ்கரன் 03.12.2025 அன்று காலமானார்.
அன்னார் வரதராசா, வசந்தகுமாரியம்மாவின் அன்பு மகனும் , காலஞ்சென்றவர்களான அப்புலிங்கம், வள்ளிநாயகியின் அன்பு மருமகனும், ரேவதியின் அன்புக் கணவரும், ஹர்சினி, ஹர்சிகன், ரித்திகாவின் அன்புத் தந்தையும், சதாகரன், விஐயகரனின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற தமிழ்செல்வி, சந்திரிகா, காலஞ்சென்ற கல்யாணி, நந்தினியின் அன்பு மைத்துனரும் ஆவார் .
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05/12/2025 மதியம் 12:00 மணிக்கு நடைபெற்று பிற்பகல் 1:30 மணிக்கு விளையாட்டு கழக மைதானத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்று தகனகிரிகைகள் நீலங்காடு நீலயங்கிரி இந்து மயானத்தில் நடைபெறும்.
தகவல் குடும்பத்தினர்

