சீ-நோர் குட்டியண்ணா: தனது மக்களுக்காக வாழ்ந்து போராடி மறைந்த ஒரு மறைக்கப்பட்ட மாமனிதரின் வரலாறு

சீ-நோர் குட்டியண்ணா: தனது மக்களுக்காக வாழ்ந்து போராடி மறைந்த ஒரு மறைக்கப்பட்ட மாமனிதரின் வரலாறு

குரு நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்து, இளவயதிலேயே தந்தையை இழந்த அந்தனி, தனது சமூகத்திற்காக கடற்தொழிலை நவீனமயப்படுத்த வேண்டும் என்ற கனவுடன் ஐம்பதுகளின் இறுதியில் ஐரோப்பாவை நோக்கி பயணிக்க முடிவு செய்கிறார். இந்த முயற்சிக்காக ஒரு நண்பருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் மத்திய கிழக்கு நாடான லெபனான் வரை சென்று சேர்கிறார். அங்கு மோட்டார் சைக்கிள் பழுதடைந்ததால், அவரது நண்பர் முதலில் வீட்டிலிருந்து பண உதவி பெற்று இங்கிலாந்து நோக்கி பயணிக்கிறார். அந்த நண்பர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அந்த காலத்தில் செழிப்பும், பல ஐரோப்பிய நாடுகளுடன் வலுவான தொடர்பும் கொண்ட லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் தங்கியிருந்த போது, அந்தனி NGO க்கள் பற்றிய அறிவையும் சில தொடர்புகளையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், தாயார் அனுப்பிய பணத்தின் உதவியுடன் அந்தனியும் இங்கிலாந்து சென்றடைகிறார்.

அங்கு அவரது மீன்பிடித் தொழிலை நவீனமயப்படுத்தும் கனவை அறிந்த சிலர், நோர்வே செல்லுமாறு வழங்கிய ஆலோசனையை ஏற்று, அவர் அறுபதுகளின் தொடக்கத்தில் நோர்வே நோக்கி பயணிக்கிறார். அங்கு மூன்று ஆண்டுகள் கடல்சார் தொழில்நுட்பங்களை பயின்று, பின்னர் யாழ்ப்பாணம் திரும்பி, இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை அமைக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்காததால் மீண்டும் நோர்வே திரும்புகிறார்.

அங்கு நோர்வே நாட்டு பெண்ணான சிக்ரன் (Sigrun Haugstad) அவரை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளின் தந்தையாகிறார். இந்த காலத்தில் The Norwegian Agency for Development Cooperation மற்றும் Norwegian Templars Organisation ஆகிய இரண்டு நிறுவனங்களின் நிதி ஆதரவைப் பெற்று, தனது 21 வயதான நோர்வே மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் அழைத்து 1967 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்புகிறார்.

காரைநகரைத் தேர்ந்தெடுத்து, அங்கு முதலில் “மாலு-மீன்”* என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, பின்னர் அதற்கு “Cey-Nor” என பெயர் மாற்றுகிறார். அந்த நிறுவனத்தின் தொடர்பாளராக ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்த அவரது மனைவி பணியாற்றுகிறார்.

இந்த நிறுவனம் ஒடுக்கப்பட்ட மீனவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் தொடங்கியிருந்தாலும், அதில் பணியாற்றிய கொழும்பைச் சேர்ந்தவர்களின் நோக்கங்கள் வேறுபட்டதால் பல முரண்பாடுகள் உருவாகின்றன. அதன் விளைவாக அந்தனி “Cey-Nor” நிறுவனத்திலிருந்து விலகுகிறார் அல்லது விலக்கப்படுகிறார்.

இதற்கிடையில், அவர்களின் மூத்த பெண் குழந்தைக்கு ஏற்பட்ட கண் விபத்தால் பார்வை பாதிக்கப்பட, அந்தனியின் குடும்பம் எழுபதுகளின் தொடக்கத்தில் மீண்டும் நோர்வேக்கு திரும்புகிறது.

செல்வம் தனது நூலில் குறிப்பிடுவதாவது, அந்தனி இலங்கையில் இருந்த காலத்திலும் பின்னர் நோர்வேயில் வாழ்ந்த காலத்திலும்1990 ஆம் ஆண்டு 59 வயதில் மரணிக்கும் வரை பலரை நோர்வேக்கு கல்வி கற்க அனுப்புவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அண்மைக் காலம் வரை, 75 வயதை கடந்திருந்த அந்தனியின் மனைவி பல முறை யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றுள்ளார். அதேபோல், யாழில் அவருக்கு நெருக்கமான நண்பராக இருந்த வைசாலாவைச் சந்திக்க கனடாவுக்கும் அடிக்கடி பயணம் செய்து வருகிறார்.

இந்த சேவை மனப்பான்மை அன்டனி இராஜேந்திரன் அவர்களின் தொண்டு முயற்சிகளால் தொடரப்பட்டது. அவரது திட்டங்கள் பலருக்கு தேவையான உதவிகளையும் புதிய நம்பிக்கையையும் அளித்தன. அவரது செயல்பாடுகள், தோப்புக்காட்டின் இரக்கம், ஒற்றுமை, மற்றும் மக்கள் சார்ந்த செயல்பாடுகள் ஆகியவற்றின் நிலையான மதிப்புகளை வெளிப்படுத்தும் சான்றுகளாக திகழ்கின்றன.

1964ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட பேரழிவின் போது, கிராம மக்கள் ஒருமித்த மனதுடன் இணைந்து அருகிலுள்ள கிராமங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது, இந்த சேவை மரபின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. தோப்புக்காட்டைச் சேர்ந்த தன்னார்வக் குழுக்கள் மயிலிட்டி, மாதகல், வல்வெட்டித்துறை, குருநகர், கொழும்புத்துறை போன்ற கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உணவு, தங்குமிடம், மற்றும் மனஅழுத்த நிவாரணம் போன்ற ஆதரவுகளை வழங்கினர்.

இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்டு, தற்போது கடற்தொழில் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் சீ-நோர் நிறுவனம் மீண்டும் செயல்படுத்தப்பட்டிருந்தாலும், அமைச்சு வழங்கும் நிதி பெரும்பாலும் தென்பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட சீ-நோர் நிறுவனத்திற்கே திருப்பப்படுகின்றதாக கூறப்படுகிறது.

வடக்கு–கிழக்கு கடல் வளம் மட்டுமே இலங்கையின் பெரும் கடனையும் அடைக்கக்கூடிய திறன் கொண்டது என்பதை அரசியல் நோக்கில் செயல்படும் ஆட்சி அமைப்புகள் நன்கு அறிந்திருந்தும், அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள விரும்பாததே உண்மை.

References:

1Kumar Ganesh – சீ-நோர் குட்டியண்ணா: தனது மக்களுக்காக போராடி மறைந்த ஒரு மாமனிதனின் மறைக்கப்பட்ட வரலாறு.
2செல்வம் (Selvam Arulanantham) எழுதிய “பனிவிழும் பனைவனம்”
3From Norway to Jaffna: A 5-decade journey of love for a man, his land and his dream project Cey-Nor | Daily FT
4தோப்புக்காடு, காரைநகர்: மறக்கப்பட்ட தமிழர் கடலோரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் – தோப்புக்காடு ~ காரைநகர் :பகுதி – இரக்கத்தின் பாரம்பரியம்: தோப்புக்காட்டின் தன்னார்வ சேவை மற்றும் தொண்டு வழிகாட்டுதல் – ( பகுதி – தகவல் மூலம் : Vadivelmurugan. Tharmadasan )
540 år for utvikling – FORUT
6Ann Eileen D. Nygård´s memory of Antony Rajendram – புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள்
7Tamil diaspora – Wikiwand

Programs Thoppukkadu

https://thoppukkadu.com owned and operated by https://AdeptWizAlliance.org and Powered by https://adeptwiz.com

27.11.2025 அன்று எமது அறிவிப்பின்படி, மழை காரணமாக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

Cey-Nor Kuttiyanna – Anthony Rajendram : The untold story of a great man who lived and fought for his people.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *