காரைநகர் தோப்புக் காட்டு முருகன் திருவூஞ்சல் (Thiruvunjal)

திருவூஞ்சல் (Thiruvunjal)

Ver1

Ver2

ஆக்கியோன் (Author):
புலவர்மணி
வட்டுக்கோட்டையூர், பண்டிதர் க.மயில்வாகனனார் [cite: 8, 9]


காப்பு (Kāppu)

விருத்தம் (Viruttam)
சீர்மேவு கழனிகளுங் கடலு மோங்கிச் [cite: 12]
செல்வமுயர் காரைநகர்த் தோப்புக் காட்டில் [cite: 13]
பார்மேவ அருள்சுரக்குஞ் சுப்ர மணிய [cite: 14]
பகவன்மேல் திருவூஞ்சல் இனிது பாட [cite: 15]
ஏர்மேவு நல்லன்பர் இதயக் கானில் [cite: 16]
இனிதுலவிப் பிளிறிவருங் களிறெம் முன்னோன் [cite: 17]
கார்மேவும் ஐங்கரத்தன் ஒற்றைக் கொம்பன் [cite: 18]
கணபதியின் சரணமலர் காப்பதாமே[cite: 19].


நூல் (Nūl)

  1. திருமலிநல் வாழ்வென்னுந் தூணின் மீதே [cite: 21]
    திண்மை யெனும் வைராக்ய விட்டங்கொண்டு [cite: 22]
    பொருவரிய அன்பென்னுங் கயிறு சேர்த்திப் [cite: 23]
    புன்னெஞ்சைப் பலகையெனப் பண்ணி வைத்தேம் [cite: 24]
    மருமலியுஞ் சோலைசெறி, தோப்புக் காட்டில் [cite: 25]
    மனமுவந்து குடிபுகுந்த கடம்ப மார்பா! [cite: 25]
    குருமணியே! செவ்வேளே! ஆடீரூஞ்சல் [cite: 26]
    கோதையரோ டினிதமர்ந்தே ஆடீரூஞ்சல் [cite: 27]. [cite: 32]
  2. விண்ணவர்கள் மருங்கமர்ந்து வாழ்த்தெ டுப்ப [cite: 28]
    விதிமுறையின் வேதியர்கள் சாமம் பாட [cite: 28]
    மண்ணவர்கள் திருவருளை வழங்கென் றேத்த [cite: 29]
    மாதவர்கள் மருங்கிருந்து நிட்டை கூட [cite: 29]
    நண்ணுபுகழ்க் காரைநகர்த் தோப்புக் காட்டில் [cite: 28]
    நலஞ்சிறப்பக் குடிபுகுந்த திருவார் மார்பா! [cite: 29]
    பண்ணமையுஞ் சுப்ரமணிய ஆடீரூஞ்சல் [cite: 30]
    பணி மொழியார் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 31]. [cite: 33]
  3. நீலநிறக் கடல்நடுவில் நிமிரும் வெய்யோன் [cite: 38]
    நினையொவ்வான் புறவிருளை நீக்கி னுந்தான் [cite: 39]
    கோலமயில் மிசைவந்தே அடியர் துன்பங் [cite: 40]
    குமராநீ தீர்ப்பதெல்லாங் கண்டோ மைய! [cite: 41]
    வேலவரே நாகமுத்து கந்தர் அன்பில் [cite: 42]
    விருப்புற்றே வந்தமர்ந்தீர் தோப்புக் காட்டில் [cite: 43]
    கோலமுகம் ஆறுடையீர் ஆடீரூஞ்சல் [cite: 44]
    கோதையர்கள் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 45]. [cite: 34]
  4. பணியுதவு மணிகொண்டே அழகு பண்ணி [cite: 46]
    பால்நிலவின் குளிர்முத்தம் பதித்து மேலும் [cite: 47]
    திணிசெம்பொன் பட்டணிந்து விளங்கும் பீடம் [cite: 47]
    செழுங்கதிர்கள் ஒருகோடி சேர்ந்தால் ஒப்ப [cite: 47]
    மணிமயிலூர் செவ்வேள்நீ இருத்தல் கண்டோம் [cite: 47]
    மாண்புமலி காரைநகர்த் தோப்புக் காடீர் [cite: 47]
    அணிகுலவு தோளுடையீர் ஆடீரூஞ்சல் [cite: 47]
    அரிவையர்கள் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 47]. [cite: 60]
  5. விஞ்சிவரு காதலொடும் உயிர்கள் தம்மை [cite: 48]
    வியன்கருணைத் தங்கரத்தால் ஆட்டி வைப்பீர் [cite: 48]
    தஞ்சமென நுமையடைந்தோம் சுப்ர மணிய! [cite: 48]
    தமிழ்க் குருவே! தனித்துணையே தண்டபாணீ! [cite: 48]
    வெஞ்சமர்செய் அவுணர்க்கும் கருணை செய்தீர் [cite: 49]
    வித்தகரே தற்பரரே ஆடீரூஞ்சல் [cite: 49]
    கஞ்சமலர்ப் பொய்கைசெறி தோப்புக் காடீர் [cite: 49]
    காரணரே அழகியரோ டாடீரூஞ்சல் [cite: 49]. [cite: 61]
  6. அவுணர்கள் புன்செயலால் அலந்தார் தேவர் [cite: 50]
    அவர்துயரந் தீர்த்தனைநீ முன்ப முன்நாள் [cite: 50]
    பலவினையால் மிடிச்சேற்றில் உழந்தோம் கந்தா [cite: 50]
    பன்னிருகை படைத்துடையாய் விரைந்தே ஆள்வாய் [cite: 51]
    சிவநெறிசேர் நல்லோர் வாழ் தோப்புக் காட்டில் [cite: 52]
    சேர்ந்தமர்ந்து வாழ்வருள்வீர் ஆடீரூஞ்சல் [cite: 52]
    தவமுதல்வா வேடர்கள்கோன் பரவுஞ் செல்வா [cite: 52]
    தையலர்கள் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 52]. [cite: 62]
  7. மின்னாரும் வைரமணி முடிகள் ஆட [cite: 53]
    விளங்குமுத்த நிரையெல்லாம் மிடைந்தே யாடப் [cite: 54]
    பொன்னாருங் குண்டலங்கள் பொலிவோ டாடப் [cite: 55]
    புயத்திலணி வலயங்கள் பொம்மென் றாட [cite: 55]
    கொன்னாருங் கழலொலிப்பக் கோழி ஓங்கிக் [cite: 56]
    குலவுகொடி எழுந்தாடத் தோப்புக் காடாள் [cite: 56]
    மன்னவரே! நெடுவேளே! ஆடீரூஞ்சல் [cite: 57]
    மங்கைமார் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 58]. [cite: 63]
  8. மணிமயில்மேல் நடமிடுவீர் ஆடீரூஞ்சல் [cite: 68]
    மாண்புடையார் நெஞ்சுறைவீர் ஆடீரூஞ்சல் [cite: 69]
    அணிகுலவு தனிவேலீர் ஆடீரூஞ்சல் [cite: 70]
    ஆறுபடை வீடுடையீர் அடீரூஞ்சல் [cite: 71]
    பணியினங்கள் விளக்கேந்தும் தோப்புக் காடாள் [cite: 72]
    பண்ணவரே! அறுமுகரே! ஆடீரூஞ்சல் [cite: 72]
    பிணிதொடரா வகையருள்வீர் ஆடீரூஞ்சல் [cite: 73]
    பெண்கொடியார் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 74]. [cite: 64]
  9. உருகிநினைந் தெழுமடியார் நெஞ்சிருப்பீர் [cite: 75]
    உத்தமர்கள் செய்கையிலே கலந்திருப்பீர் [cite: 76]
    பருகுதமிழ்ப் பாடலெலாம் படிந்து நிற்பீர் [cite: 77]
    பயன்குலவு மலைகடொறும் ஆடல் கொண்டீர் [cite: 78]
    அருகுதொறும் கலம்புகுந்தே பண்டம் வீச [cite: 79]
    அருவளஞ்சேர் தோப்புக்கா டிடமாய்க் கொண்டீர் [cite: 80]
    மருவுதிரு வேற்படையீர் ஆடீரூஞ்சல் [cite: 81]
    மயில்நிகர்மென் சாயலரோ டாடீரூஞ்சல் [cite: 82]. [cite: 89]

வாழி (Vāḻi – Benediction)

துங்கமலி சிவம்வாழி தமிழும் வாழி [cite: 84]
தொன்மையவாம் மறைவாழி மழையும் வாழி [cite: 85]
பங்கமிலா அறம்வளர்க்கும் முனைவோர் வாழி [cite: 86]
படியாளும் தலைவரறம் பயின்று வாழி [cite: 86]
பொங்குமருட் குமரன்வாழ் தோப்புக் காட்டில் [cite: 86]
புகுந்துபணிந் திடுமன்பர் நாளும் வாழி [cite: 86]
எங்குமுள உயிரினங்கள் வாழி வாழி [cite: 87]
இசைமிகு பரிபாலனசபை இனிது வாழி [cite: 88]
முற்றும் [cite: 88]. [cite: 90, 91]

Programs Thoppukkadu

https://thoppukkadu.com owned and operated by https://AdeptWizAlliance.org and Powered by https://adeptwiz.com

தோப்புக்காடு இளைஞர்கள், 05-12-2025 அன்று சிரமதான முயற்சியால் நீலங்காடு மயானத்தை சுத்தமாக்கினர்.

27.11.2025 அன்று எமது அறிவிப்பின்படி, மழை காரணமாக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *